நல்லூர் ஆலய முன்றலில் பதிதாக காவலரண் அமைத்து காவலில் இருக்கும் இராணுவத்தினர்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தன் ஆலய முன்றலில் திடீரென இராணுவ கவலரண் ஒன்று அமைக்கப்பட்டு அங்கு இராணுவத்தினர் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்.நேற்று வருடப்பிறப்பாகையால் ஆலயத்துக்குச் சென்ற பக்தர்கள் திடீரென ஆலயச் சூழலில் இராணுவக் காவலரண் அமைக்கப்பட்டுள்ளமை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

ஆலய சூழலில் இவ்வாறு திடீர் படையினரின் காவலரண் அமைக்க்ப்பட்டமைக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்ல.

பாதுகாப்புக்காகவே இராணுவக் காவலரண் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த காலங்களில் நல்லூர் ஆலயச் சூழலில் பொலிஸாரே பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் பாதுகாப்பு என்ற பெயரில் திடீரென காவலரண் அமைக்கப்பட்டு இராணுவக் காவலரண் அமைக்க்ப்பட்டுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்துவதாக ஆலயத்துக்குச் சென்ற பக்தர்கள் தெரிவித்தனர்.

நீண்ட காலத்துக்கு தொடர்ந்தும் நிலைகொள்ளும் வகையிலேயே இந்தக் காவலரண் அமைக்கப்பட்டுள்ளதாவெனவும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

nallur_sentry01

Recommended For You

About the Author: Editor