நல்லூர் ஆலய சூழலில் தேர்தல் பிரசாரத்திற்கு தடை

NallurTemple05நல்லூர் ஆலய சூழலில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுதல் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் அ. அச்சுதன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நல்லூர் ஆலயத்தின் வருடார்ந்த உற்சவம் எதிர்வரும் 12ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்து 25 தினங்கள் இடம்பெறவுள்ளன.

இக்காலக்கட்டத்தில் ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் பிரசாரங்கள் செய்வது, சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தல் போன்ற செயற்பாடுளில் ஈடுபடுதல் தடை செய்யப்பட்டுள்ளது.

இதனை மீறிச் செயற்படுபவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது சட்டநடவெடிக்கை மேற்கொள்ளப்படும்.

இப்பிரதேசம் வணக்கத்துக்கரிய பிரதேசம் என்பதால் மேற்படி செயற்பாடுகள் இடம்பெறாமல் இருப்பதற்கு கட்சி, கட்சி சார்ந்த வேட்பாளர்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி

நல்லூர் கந்தன் ஆலய உற்சவம் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பம்