நல்லூரில் 1,200 வீதி விளக்குகள்

நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் இதுவரை 1,200 க்கு மேற்பட்ட வீதி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் ப.வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

சபையின் எல்லைக்கு உட்பட்ட மக்களின் பங்களிப்புடன் இந்த வீதி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதுடன் தற்போது தொடர்ந்தும் சில வீதிகளுக்கான விளக்குகள் பொருத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.