வடமாகாண சபைத் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுப்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை நல்லூர் கந்தன் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இந்த பூசை வழிபாடுகளில் அமைச்சாகளான பசில் ராஜபக்ஷ, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோர் கலந்துகொண்டனர்.