நல்லூரில் தியாகி திலீபனின் நினைவுத் தூபி உடைப்பு

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயச் சூழலில் அமைந்திருந்த தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபி இனந்தெரியாத நபர்களினால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.இந்திய அரசாங்கத்திற்கு எதிராக 5 அம்சக் கோரிக்கையை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட திலீபன் நினைவாக நல்லூர் ஆலயச் சூழலில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை இரவு வாகனத்தில் வந்த கும்பல் ஒன்றினால் உடைக்கபட்டுள்ளதாக தெரியவருகின்றது.

திலீபன் நினைவாக இந்த தூபி அவர் உண்ணாவிரதம் இருந்த இடத்தில் சமாதான காலத்தில் நிறுவப்பட்டது. இன்று வரை இந்த தூவி எதுவித சேதங்களும் இன்றி காணப்பட்டு வந்துள்ளது.

யாழில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து இந்த தூபி உடைக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor