நல்லூரில் டிடி ரிவியின் ஊடக விளம்பரத்திற்கு அனுமதி வழங்கியது முதல்வரா?

யாழ். மாநகர சபை முதல்வரால் டிடி ரிவிக்கு மட்டும் நல்லூர் ஆலயச்சூழலில் ஊடக விளம்பரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

DDTV-add-3

நல்லூர் ஆலயத்தை சூழவுள்ள பகுதிகளில் திருவிழாக்காலங்களில் ஊடக விளம்பரங்களுக்கு யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசாவினால் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவோடு இரவாக யாழில். தனியார் ஒருவரால் பரிச்சாத்தமாக ஒளிபரப்பு செய்யப்படும் டிடி ரி.வியின் விளம்பரங்கள் ஒட்டப்பட்டும் கட்டப்பட்டும் உள்ளன.

ஆலயத்தின் புனிதத்தை பேணும் முகமாக இம்முறை திருவிழாவின் போது ஊடகங்களின் விளம்பரங்கள் மற்றும் ஏனைய விளம்பரங்களுக்கும் தடை விதிப்பதாக முதல்வர் அறிவித்திருந்தார்.

DDTV-add-2

கொடியேற்றத்தன்று இரவு யாழ். மற்றும் கொழும்பில் இருந்து ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சிகள் இரண்டின் விளம்பரங்கள் மாநகர சபையின் உத்தியோகத்தர்களால் அகற்றப்பட்டதுடன் அவற்றை ஆலயச் சூழலில் கட்டவேண்டாம் என்றும் பணிக்கப்பட்டிருந்தனர்.

DDTV-add

மேலும் ஆலயச்சூழலில் ஒட்டப்பட்டிருந்த வங்கிகளின் விளம்பரங்களும் மாநகர சபையின் உத்தியோகத்தர்களால் அகற்றப்பட்டன.

அவ்வாறானதொரு நிலையில் டிடி ரிவிக்கு மட்டும் எவ்வாறு அனுமதி கிடைத்தது. இதற்கு முதல்வரே அனுமதி வழங்கியுள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.