நல்லூரில் காவடி ஆடிய இராணுவம்!

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் இன்று புதன்கிழமை காலை இடம் பெற்ற பூசை வழிபாடுகளில் யாழ். மாவட்டப் படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா தலைமையில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் கலந்து கொண்டனர்.

நல்லூர் சங்கிலியன் தோப்பில் இருந்து மங்கல வாத்தியங்களுடன் இராணுவத்தினர் காவடிகள் எடுத்துவர ஏனையோரும் ஊர்வலமாக நல்லூர் ஆலயத்தை சென்றடைந்தார்கள்.

இதன்போது ஆலயத்தில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டதுடன் தமது படைப்பிரிவுகளின் கொடிகளை வைத்து ஆசீர்வாதம் பெற்றும் சென்றனர்.

army-nallur

army-nallur-1

army-nallur-3