நல்லூரில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை அகற்ற நடவடிக்கை !

Nallur-notesநல்லூர் ஆலய சூழலில் ஒட்டப்பட்டிருந்த திருடர்களிடம் இருந்து விழிப்பாக இருங்கள் எனும் சுவரொட்டிகளை அகற்ற பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர் .

கடந்த சில தினங்களாக நல்லூர் ஆலய சூழலில் திருடர்களிடம் இருந்து விழிப்பாக இருங்கள் என்னும் சுவரொட்டிகள் யாழ்ப்பாண பொலிஸ் பிரிவினால் ஒட்டப்பட்டிருந்தன.

அவற்றில் சில பெண்களின் புகைப்படங்கள் காணப்பட்டன. இதனால் குறித்த பெண்களின் தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படுவதாக ஊடகவியலாளர்களால் இன்று யாழ் மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர் ரி.கனகராஜின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது .

குறித்த சுவரொட்டி தொடர்பாக ரி.கனகராஜ் உரிய பொலிஸ் உயர் அதிகாரியுடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட போது,

தாம் மக்களின் பாதுகாப்புக்காகவே இவ்வாறான சுவரொட்டிகளை ஒட்டியிருந்ததாகவும் அவற்றினால் சுவரொட்டியில் உள்ள பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் எனின் அவற்றினை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் குறித்த பொலிஸ் அதிகாரி தெரிவித்ததாக யாழ் மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி

பொலிஸாரின் எச்சரிக்கை சுவரொட்டிகள்