நரசிம்மர் வைரவர் ஆலயத்தில் வேள்வி நடைபெறும்: நிர்வாகம்

aadu-sheepவலி. வடக்கில் உள்ள கீரிமலை கருகம்பனை கவுணாவத்தை நரசிம்மர் வைரவர் ஆலயத்தில் இன்று வேள்வி நடைபெறும் என்று ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

இன்று நடைபெறவிருந்த வேள்வியை தடுக்கக்கோரி தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரியினால் இளவாலை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு நேற்று வெள்ளிக்கிழமை சுகாதார வைத்திய அதிகாரியினால் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்தே வேள்வி நடைபெறும் என்று ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த பல வருடங்களாக இடம்பெற்றுவரும் இந்த ஆலய வேள்வியை நிறுத்தவேண்டும் என சுகாதார வைத்திய அதிகாரி அறிவுறுத்தியபோதிலும் வேள்வி நிறுத்தப்படவில்லை.

இதனையடுத்தே இந்த முறைப்பாடு செய்யப்பட்டது.

வேள்வி நடத்தப்படுவதற்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டமையினால் வேள்வி நடைபெறுமா? இல்லையா? என்பது தொடர்பில் பொதுமக்களிடையே குழப்பகரமான நிலைமை ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து இளவாலைப் பொலிஸார் இரு பகுதியினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆலயத்தில் வேள்வியை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் மேற்க்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இதனை உடனடியாக நிறுத்துவதற்கு எத்தணிப்பதால் பொது மக்களிடையே குழப்பமான நிலமை ஏற்படும் என்று ஆலய நிர்வாகத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆகையால், இந்த ஆண்டு மட்டும் வேள்வி நடத்தப்படும் என்று வலி. வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சா.சுகிர்தன் மற்றும் ஆலய தர்மகர்த்த சபையினர் தெரிவித்தனர்.

அதனடிப்படையிலேயே சுகாதார வைத்திய அதிகாரி தனது முறைப்பாட்டை வாபஸ் வாங்கிக்கொண்டார்.

Recommended For You

About the Author: Editor