நயினாதீவு செல்லும் பக்தர்களுக்கு விசேட பேரூந்து சேவை

ctb_busநயினை நாகபூசணி அம்மன் ஆலய திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களின் நலனைக் கருத்திற்கொண்டு விசேட பேரூந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ். சாலையினர் அறிவித்துள்ளனர்.

நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 28 ஆம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்றும் , நாளையும், நாளைமறுதினமும் விசேட பேரூந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விசேட பேரூந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பேரூந்து நிலையத்தில் தொடர்ந்தும் அறிவித்துக் கொண்டிருப்பதாகவும் பக்தர்கள் இலகுவாக தங்கள் பயணங்களை மேற்கொள்ள முடியும் என்றும் யாழ். சாலையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.