நயினாதீவு கடற்பரப்பில் 10 கிலோ கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று வியாழக்கிழமை இரவு நயினாதீவு கடற்பரப்பு பகுதியில் இருந்த கஞ்சாவே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கஞ்சாவினை கடற்பரப்பில் வைத்த சந்தேகநபர்கள் குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என்றும், எவரையும் இதுவரை கைதுசெய்யவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்க்கப்பட்ட கஞ்சா குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் ஊர்காவற்துறை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.