நயினாதீவு ஆலயத்தின் வருடாந்த உற்சவம் பிற்போடப்பட்டது!!

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் பிற்போடப்பட்டுள்ளது.

குறித்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் செப்டெம்பர் 6 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக ஆலய அறங்காவலர் சபையினர் அறிவித்துள்ளனர்.

இந்த மாதம் 10 ஆம் திகதி,கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவிருந்த ஆலய வருடாந்த மகோற்சவத்தை மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் நடத்துவதற்கு இதற்கு முன்னர் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து நிலவுகின்றமையினால், ஆலய அறங்காவலர் சபையினர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor