Ad Widget

நந்திக்கடலுக்கான பாதையை வெளியிட்டுவைத்தார் மகிந்தராஜபக்ஷ!

சிறீலங்கா இராணுவத்திலிருந்து நேற்று முன்தினம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவினால் எழுதப்பட்ட ‘நந்திக்கடலுக்கான பாதை’ நூலினை சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்தராஜபக்ஷ வெளியிட்டு வைத்தார்.

Road-to-Nandikadal-launch-2-book-army

ஆனந்தாக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில், நூலின் முதல் பிரதியை மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, மகிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தார்.

இந்த நிகழ்வில், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், கலாநிதி றொகான் குணரத்ன, கலாநிதி தயான் ஜெயதிலக ஆகியோரும் கலந்துகொண்டனர்.

விடுதலைப்புலிகளுடனான தனது போர் அனுபவங்களை 800 பக்கத்தில் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன எழுதியுள்ளார்.

Related Posts