இருபாலையில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருபாலை தெற்கு ஆனந்தபுரம் வீதிப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய நாகலிங்கம் சதீஸ் பிரசாத் என்னும் இளைஞனே இவ்வாறு அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
குறித்த இளைஞன் நண்பர்களுடன் வீட்டில் வந்து உறங்கியதாகவும், நேற்றுக் காலையில் எழுந்து பார்க்கும் போது தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த இளைஞனுடன் வீட்டில் தங்கிய நண்பர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் குறித்த இளைஞனின் உடலில் அடிகாயங்கள் காணப்படுவதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற மரண விசாரணை அதிகாரி உதயசிறி விசாரணையை மேற்கொண்டதுடன் சடலத்தை யாழ் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
இச் சம்பவம் தொடர்பில் குறித்த இளைஞனின் நண்பர்கள் தேடப்பட்டு வருவதாகவும் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்