மிதிபலகையில் நின்று பயணித்த தனியார் பஸ் நடத்துநர் கீழே வீழ்ந்து உயிரிழந்தமையடுத்து, கைது செய்யப்பட்ட அந்த பஸ்ஸின் சாரதியை எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி, திங்கட்கிழமை (27) உத்தரவிட்டார்.
கடந்த 24ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ்ஸின் மிதிபலகையில் நின்று பயணித்த, அந்த பஸ்ஸின் நடத்துநரான மானிப்பாய் பகுதியை சேர்ந்த ஹரிநாரயணதாஸ் தினேஸ்குமார் (வயது 21) என்பவர் தவறி வீழ்ந்து படுகாயமடைந்தார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை (27) காலை உயிரிழந்தார்.
இதனையடுத்து பஸ்ஸின் சாரதியை கைது செய்த மானிப்பாய் பொலிஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியபோதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.