யாழ். நகர்ப் பகுதியிலுள்ள வீதிகளை வெப்பத்திலிருந்து தணிக்கும் நடவடிக்கையை யாழ்ப்பாணம் மாநகர சபை மேற்கொண்டு வருகின்றது.
யாழ்ப்பாணத்தில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக பொதுமக்கள் நடமாடுவதற்கு அஞ்சும் நிலைமை காணப்படுகின்றது.
அதிக மக்கள் வந்து செல்லும் இடமாக இருக்கும் யாழ்ப்பாண நகர வீதிகளில் மக்கள் பயணிக்க முடியாத நிலையில் வெப்பம் காணப்படுகின்றது.
இதனைத் தணிக்கும் வகையில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் தண்ணீர் வண்டிகள், யாழ்ப்பாணம் நகர வீதிகளில் தண்ணீர் தெளித்து வெப்பத்தை குறைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளன.