தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகளின் மனித உரிமைகள் தின ஒன்று கூடல் நிகழ்வு நேற்று பிற்பகல் யாழ் 3 ஆம் குறுக்குத் தெருவில் நடைபெற்றது.
கட்சியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காணாமற்போனார்கள் மற்றும் சிறைகளில் வாடும் உறவுகளது விடுதலை நலனை வேண்டி தீபமேற்றி பிரார்த்தனை செய்யப்பட்டன.
நவநீதம்பிள்ளைக்கு அனுப்புவதற்காக எழுதப்பட்ட மனுவும் இந்நிகழ்வில் வாசிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கட்சியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் பிரபல சடத்தரணியுமான எஸ்.கந்தசாமி, அருட்பணி எஸ்.ராஜ்குமார், கட்சியின் உறுப்பினர் திருமதி பத்மினி சிதம்பரநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.