த.தே.ம.மு முக்கியஸ்தர்களிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் விசாரணை

kajenthiranதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உபதலைவர் மற்றும் வவுனியா மாவட்ட அமைப்பாளர் ஆகியோரிடம் வவுனியா பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் நேற்று திங்கட்கிழமை விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 18ஆம் திகதி சனிக்கிழமை, வவுனியாவில் முள்ளிவாய்கால் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டமை அக்கட்சியின் உப தலைவரான சிவபாதம் கஜேந்திரன் மற்றும் வவுனியா மாவட்ட அமைப்பாளரான கிருஸ்ணகோபால் வசந்தரூபன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று காலை 8.50 மணி முதல் மாலை 3 மணிவரை இந்த விசாரணைகள் இடம்பெற்றதாகவும் இதன்போது வவனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் தமது கட்சியால் நினைவு கூறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் சமனங்குளத்தில் அமைந்துள்ள தூபியில் நினைவு தினத்தை அனுஸ்டிப்பதற்கான காரணம் பற்றியும் கேட்டறியப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.