த.தே.கூ உறுப்பினர் கூட்டமைப்புடன் இணைவு

v-sivanathanதமிழ் தேசிய கூட்டமைப்பின் வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பனர் வி.சிவநாதன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்துள்ளார்.

சுயேட்சையாக போட்டியிடுவதிலிருந்து தான் விலகுவதாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து மக்களுக்கு சேவை செய்ய முடியாததால் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் யாழ்.காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.