த.தே.கூட்டமைப்பு பதிவு செய்வது தொடர்பாக கட்சிகளுக்கிடையே இன்று கலந்துரையாடல்

tnaதமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வது உள்ளிட்ட பல தரப்பட்ட விடயங்கள் தொடர்பாக கட்சிகளுக்கிடையே இன்றைய தினம் கலந்துரையாடப்படவுள்ளன.

இது தொடர்பான சந்திப்பு ஒன்று இன்று மாலை கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனுடன் இடம்பெறவுள்ளதாக டெலோ இயக்கத்தின் பிரசார செயலாளர் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.