தொழிற்பயிற்சி அதிகார சபையால் 10 இலவச கற்கைநெறிகள்!

இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை இலவசமாக பத்து கற்கைநெறிகளை யாழ்.மாவட்டத்தில் உள்ள தொழிற் பயிற்சி நிலையங்களில் ஆரம்பிக்கவுள்ளது.

இந்தக் கற்கைநெறிகள் ஜனவரி ஆரம்பமாகவுள்ளது.

  1. கட்டட நிர்மாண தொழில்நுட்ப உதவியாளர்
  2. வீட்டு மின்னிணைப்பாளர்
  3. காய்ச்சி இணைப்பாளர் (வெல்டிங்)
  4. மரவேலை தொழில்நுட்பவியலாளர்(தளபாடம்)
  5. நீர்குழாய் பொருத்துநர்
  6. வெளியிணைப்பு இயந்திரம் திருத்துநர்,
  7. அலுமினியம் பொருத்துநர்
  8. வீட்டு மின்சார உபகரண திருத்துநர்
  9. மின்மோட்டார் கம்பி மீள் முறுக்குநர்(றிவைண்டிங்)
  10. விவசாய உபகரண திருத்துநர்

ஆகிய கற்கைநெறிகளும் தேசிய தொழில் தகைமை சான்றிதழுக்கான பயிற்சிகளாகும்.

இந்தக் கற்கைநெறிகளை கற்க விரும்புவர்கள் தங்கள் பதிவுகளை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் உள்ள அலுவலகத்தில் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.