தொலைபேசி வெளிச்சத்தில் மீன் வியாபாரம் செய்யும் மீனவர்கள் !

phone-torchயாழ்ப்பாணம் காக்கைதீவு கடற்கரையிலுள்ள மாலை நேர மீன் சந்தைக்கு மின்சார இணைப்பினைப் பெற்றுத்தருமாறு மீனவர்களும் அச்சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இக் கடற்ரையில் மாலை வேளையில் மீன் சந்தை இயங்கி வருகின்றது. இம் மீன் சந்தைக்கு பல நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் செல்கின்றனர்.

மானிப்பாய் பிரதேச சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட இச் சந்தையில் காலையில் குத்தகை அறவிடப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் சந்தைக்கு மின் வெளிச்சத்தினை ஏற்படுத்த எவரும் முன்வரவில்லை.

இரவில் தொலைபேசி வெளிச்சம், வாகன வெளிச்சங்களில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதால் தமது வியாபாரம் பாதிப்படைவதாக மீனவர்களும் வர்த்தகர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.