வற் வரி திருத்தத்தால் அதிகரிக்கப்பட்ட இந் நாட்டு தொலைபேசி கட்டணத்தால் மக்களுக்கு பாரிய சுமை ஏற்படாது என தொலைத் தொடர்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
வற் வரி உயர்வு நியாயப்படுத்த முடியாது எனினும் நிலவும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகத்தில் குறைந்த தொலை பேசி கட்டணம் அறவிடும் நாடு இலங்கை என பி.பி.சியில் இடம்பெற்ற செவ்வியில் கலந்து கொண்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நீண்ட கால திட்டத்தில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதால் எதிர் காலத்தில் நல்ல முடிவு பொது மக்களுக்கு கிடைக்கும் என அமைச்சர் இதன் போது நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
புதிய கட்டண விபரம்
ஏற்கனவே, கடந்த பெப்ரவரி முதலாம் திகதியில் இருந்து reload உட்பட அனைத்து தொலைபேசி கட்டணங்களுடன் நூற்றுக்கு 25 வீதம் அதிகரிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி ஓரே வலையமைப்பிற்குள் 1 ரூபாவாக இருந்த கட்டணம் 1.25 ஆக அதிகரித்தது. மற்றொரு நெட்வேர்க் இற்கு அழைக்கும் போது 2 ரூபாவாக இருந்த கட்டணம் 2.50 ஆக மாறி இருந்தது.
இந்நிலையில், தற்போது 25 வீதம் உள்ள வரி மதிப்பீட்டு கூட்டு வரி vat உடன் சேர்த்து நூற்றுக்கு 46 வீதமாக அதிகரிக்கும்.
அதன்படி 1.25 ரூபாவாக இருந்த கட்டணம் 1.46 ரூபாவாக உயர்வடையும்.
அதனைப்போல 2.50 இருக்கும் கட்டணம் 2.92 ரூபாவாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.