தொலைத்தொடர்பு கம்பிகள் அறுப்பு

யாழ்ப்பாணம், நெல்லியடி, நாவலர் மடம் தொடக்கம் கரவெட்டி பிரதேச செயலகம் வரையிலான தொலைத்தொடர்பு கம்பிகள், நேற்று சனிக்கிழமை (18) அதிகாலை இனந்தெரியாதோரால் அறுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில், தொலைத்தொடர்பு நிலைய அதிகாரிகளால் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு கம்பிகளே இவ்வாறு அறுக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதிக்கான கம்பி வழியான தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

அறுக்கப்பட்ட கம்பிகளை பொருத்தும் பணிகள் சனிக்கிழமை (18) மாலை தொடக்கம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் கூறினர்.