தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனங்களை எதிர்வரும் நான்கு மாத காலத்திற்குள் பெற்றுத்தருவதாக வட மாகாண ஆளுநர் உறுதியளித்ததைத் தொடர்ந்து, உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது.
நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரிக்கை விடுத்து, வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் நேற்று முன்தினம் முதல் காலவரையறையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனையடுத்து, தொண்டர் ஆசிரியர்களை நேற்று மாலை சந்தித்த வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே, மேற்குறித்த வாக்குறுதியை வழங்கியதோடு, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு நீரை வழங்கி போராட்டத்தை முடித்து வைத்தார்.
இதேவேளை, நாளைய (இன்று)தினம் தாம் ஜனாதிபதியை சந்தித்து இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் ஆளுநர் உறுதியளித்துள்ளார்.