தொண்டர்களுக்கு ஆதரவாக நிரந்தர ஊழியர்களும் பணிப்புறக்கணிப்பில்

hospital-stjonsகடந்த 12 ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலை தொண்டர்கள் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு ஆறாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதாக கூறப்பட்ட நிலையிலும் தற்போது புதிய தொண்டர்களை க.பொ.த சாதாரண தர சித்தியுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்தவியாழக்கிழமை முதல் தொண்டர்கள் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்திருந்தனர்.

இதனால் யாழ் போதனா வைத்தியசாலையின் நோயாளிகளை கொண்டுசெல்லுதல் மற்றும் நோயாளர் பராமரிப்பு பணிகள் ஆகியன பெரிதும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

இதுவரை எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் தொண்டர்களுக்கு ஆதரவாக நிரந்தர ஊழியர்கள் நாளை காலை 9 மணிக்கு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

மேலும் நாளை முடிவுகள் எட்டப்படாவிடின் நாளை மறுதினம் உண்ணாவிரதப் போராடடத்தில் ஈடுபடவுள்ளதாக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.