தொடர் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக மணி ஒலி எழுப்பி வடக்கில் அஞ்சலி

பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று ஒருமாதம் கடந்துள்ளமையை முன்னிட்டு அதில் உயிரிழந்த மக்களை நினைவு கூறும் முகமாக அனைத்து வணக்கஸ்தலங்களிலும் மணி ஒலி எழுப்பி அஞ்சலி செலுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அழைப்பு விடுத்துள்ளார்.

அதற்கமைய இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.45 மணிக்கு வடக்கிலுள்ள அனைத்து வணக்கஸ்தலங்களிலும் மணியோசை ஒலிக்கச் செய்ய வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அனைத்து மக்களையும் ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்துமாறு சுரேன் ராகவன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி கொழும்பு உள்ளிட்ட ஏனைய பகுதிகளில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts