தொடர்மாடி குடியிருப்பு ஒன்றை அமைத்து தருமாறு கோரிக்கை

jaffna_major_yogeswari_CIயாழ்.பாசையூர் பகுதியில் தொடர்மாடி குடியிருப்பு ஒன்றை அமைத்து தருமாறு வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்சவிடம் யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஷ்வரி பற்குணராஜா கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

யாழ்.குருநகர் தொடர்மாடிக் குடியிருப்பு மீள்நீர்மாண திட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

‘குருநகரில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் உள்ள பாசையூர் கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் காணி உள்ளது.

இந்தப் பிரதேசத்தில் தொடர்மாடிக் குடியிருப்பை நிர்மாணித்தால் அங்குள்ள மக்களின் குடியிருப்பு தொடர்பான பிரச்சனையை தீர்க்க முடியும். இந்த கோரிக்கையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஊடாக முன்வைக்கிறேன்’ என இதன்போது அவர் தெரிவித்தார்.

Related Posts