ரயில் மீது மேற்கொள்ளப்பட கல்வீச்சு தாக்குதலில் பயணியொருவர் காயமடைந்துள்ளதாக ரயில் போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த இரவு நேர தபால் ரயில், திருகோணமலை மற்றும் சீனக்குடா ஆகிய பிரதேசத்துக்கிடையில் பயணிக்கும் போது மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சிலேயே பயணியொருவர் காயமடைந்துள்ளார்.
இதற்கு முன்னரும் கிளிநோச்சி பகுதியில் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி