தபால் திணைக்கள ஊழியர்கள் ஆரம்பித்த வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஒருங்கிணைப்பாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.
காலை முதல் ஆரம்பமான இந்த தொழிற்சங்க நடவடிக்கை மிகவும் வெற்றிகரமாக தற்போது வரை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
தனது பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காவிடில், தொடர்ந்தும் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக, சிந்தக்க பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த விடயம் குறித்து தபால் அமைச்சர் எம்.ஏ.ஏ.கலீமிடம் வினவியபோது, இது குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இன்று விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக, கூறியுள்ளார்