உழவர் தினத்தை முன்னிட்டு தைப்பொங்கல் தினத்தையும், உழவர்களின் பெருமையினையும் பிரதிபலிக்கும் வகையில் முத்திரை மற்றும் கடிதவுறையினையும் பிரதமர் தி.மு.ஜயரத்ன யாழில் இன்று வெளியிட்டு வைத்தார்.
இந்நிகழ்வு வடமாகாண அஞ்சல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் இன்று காலை 09.30 மணியளவில் நடைபெற்றது.
வடமாகாண அஞ்சல் திணைக்களத்தின் பிரதி அஞ்சல் மா அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பிரதமர் தி.மு.ஜயரத்ன கலந்துகொண்டு உழவர்களின் பெருமைகளை வெளிப்படுத்துவதாக அமைந்த 05, 25 ரூபா பெறுமதியுடைய முத்திரைகளையும் கடிதவுறையினையும் வெளியிட்டு வைத்தார்.
இந்நிகழ்வில் இலங்கை தபால் மா அதிபர் ரோஹான அபேயரத்ன, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாநகர சபை முதல் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, வடமாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், நல்லை ஆதின குருமுதல்வர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது அறநெறி பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.