தைப்பொங்கல் திருநாளை வீட்டில் இருந்து கொண்டாடுங்கள்; சுகாதார அமைச்சு

தைப்பொங்கல் திருநாளை வீட்டிலிருந்து கொண்டாடுமாறு சுகாதார அமைச்சு கேட்டுள்ளது.

ஒரு வளமான நாட்டைக் கட்டியெழுப்ப அடுத்த ஆறு மாதங்களில் அனைத்து இலங்கையர்களும் பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி வலியுறுத்தினார்.

இன்று சுகாதார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,
கோரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்க சரியான சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி அரசின் கோரோனா கட்டுப்பாட்டு திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், மருத்துவர் அசெல குணவர்தன, தைப்பொங்கல் நாளில் வெளியில் செல்லாமல் வீட்டில் இருந்து கொண்டாடுமாறு அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.

Recommended For You

About the Author: Editor