தேவாலயத்திலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு

நெல்லியடி புனித அந்தோனியர் தேவாலயத்தில் இருந்து வியாழக்கிழமை (07) காலை இளைஞன் ஒருவரர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று நெல்லியடி பொலிஸார் கூறினர்.

நெடுந்தீவு 11ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஜெசுரட்ணம் ஆரோக்கியராஜ் (வயது 19) என்ற இளைஞனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

தேவாலய பாதிரியாரை சந்திப்பதற்காக புதன்கிழமை (06) மாலை தாயாருடன், நெல்லிடிக்கு வருகை தந்திருந்த இளைஞன், இரவு தேவாலயத்தில் தங்கியுள்ளார். இந்நிலையிலேயே அவ்விளைஞன் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் மீட்கப்பட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினார்.

Related Posts