தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் முன்வைத்துள்ள அவசர கோரிக்கை

வாக்காளர்கள் தங்களது வாக்குசீட்டை ஒளிப்படம் பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கேட்டுக்கொண்டுள்ளார்.

அவ்வாறு சிலர் வாக்குசீட்டை ஒளிப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளதாகவும் அது சட்டவிரோதமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேர்தல் வாக்களிப்பு நிலையங்களின் வெளிப்புற மற்றும் உட்புற காட்சிகளை இன்று மாலை 5.00 மணிக்கு முன்னர் ஊடகங்களில் வெளியிடுவதை தவிர்க்குமாறு அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts