தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதியொருவரை கூட்டமைப்பின் சார்பில் களமிறக்க நடவடிக்கை?

வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முஸ்லிம் பிரதிநிதியொருவரை தேர்தலில் நிறுத்துவது தொடர்பாக கூட்டமைப்பினர் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுக்கிடையில் வேட்பாளர் பங்கீடு தொடர்பான இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ்.மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதியொருவரை கூட்டமைப்பின் சார்பில் நிறுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இது தொடர்பாக கூட்டமைப்பினருக்கும் முஸ்லிம் தரப்பினருக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றுள்ளன.

ஆயினும் இவை தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று அல்லது நாளையே மேற்கொள்ளப்படும் என கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: Editor