தேர்ச்சில்லில் அகப்பட்டு முதியவர் படுகாயம்!

accidentபருத்தித்துறைச் சிவன் கோயிலில் இடம்பெற்ற தேர்திருவிழாவின் போது தேரின் சில்லில் அகப்பட்டு முதியவர் ஒருவரின் கால்முறிந்தது.

பருத்தித்துறை சிவன் கோயில் தேர்திருவிழா நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதியவர் ஒருவரின் கால் தவறுதலாக தேர்ச்சில்லில் அகப்பட்டு முறிந்தது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இவர் மேலதிக சிசிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார். புற்றளை புலோலியைச் சேர்ந்த ம.இமராமசாமி (வயது 69) என்பவரே கால் முறிந்து படுகாயமடைந்தவராவார்.