தேரருக்கு மார்புக்கச்சையை பரிசளித்த ஆளுங்கட்சி வேட்பாளர்

ஊவா மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்ட ஆளுங்கட்சி வேட்பாளரொருவர், மொனராகலையைச் சேர்ந்த தேரர் ஒருவருக்கு பரிசளித்த மருந்துப் பொதிக்குள் பெண்ணின் மார்புக் கச்சையொன்றும் இருந்ததாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டார, நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இவ்வாறு பரிசளிக்கப்பட்ட மார்ப்புக் கச்சையையும் நாடாளுமன்றத்துக்கு எடுத்து வந்த ரங்கே பண்டார எம்.பி, அந்த மார்புக் கச்சையில் ஊவா மாகாணசபைத தேர்தலில் போட்டியிட்ட ஆளுங்கட்சி முதலமைச்சர் வேட்பாளர் சஷிந்திர ராஜபக்ஷவின் பெயர் பொறிக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.