தேசிய முதியோர் செயலகம் விடுத்துள்ள விசேட அறிக்கை!

நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, முதியவர்கள் மற்றும் விசேட தேவை உடையவர்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய முதியோர் செயலகம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, முதியோர் இல்லங்கள் மற்றும் முதியவர்கள் இருக்க கூடிய வீடுகள் இது குறித்து அவதானம் செலுத்துமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வயது முதியோர் மற்றும் விசேட தேவையுடையவர்கள் இருக்கும் இடங்களில் அதிகளவானவர்கள் ஒன்று கூடுவதையோ அல்லது அவர்களை சன நெரிசலான இடங்களுக்கு அழைத்து செல்வதையோ தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்க்பட்டுள்ளது.

இதேவேளை, முதியோர் மற்றும் விசேட தேவையுடையவர்கள் இருக்கும் இடங்களில் சுகாதார நியமங்களை மிகவும் கட்டாயமாக கடைபிடிக்குமாறும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor