தேசிய மீனவர் மாநாடு

fishermenதேசிய மீனவர் மகா சம்மேளனத்தின் தேசிய மகாநாடு எதிர்வரும் 22 ஆம் திகதி அலரி மாளிகை கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை உதவிப் பணிப்பாளர் என். கணேசமூர்த்தி இன்று தெரிவித்தார்.

தேசிய மீனவர் மகா சம்மேளனத்தின் தலைவர் அமைச்சர் வைத்தியர் ராஜித சேனாரட்ன ஏற்பாட்டில்; ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.

தேசிய மாநாடு தொடர்பாக தெரிவுசெய்யப்பட்ட திட்டமிடல் குழு தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு கிராமிய மற்றும் மாவட்ட கிராமிய மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகளை தெரிவு செய்யுமாறும் அவர் மேலும் கூறினார்.