பொதுமக்களின் ஆலோசனைகளை கருத்திற் கொண்டு அறிஞர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அடங்கிய விசேட குழுவொன்றின் மூலம் நாட்டின் தேசிய மலர் “நீல அல்லி” என 1986ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது. இந்நிலையில் குறித்த பெயரை “நீலோத்பலம்” என பெயர் மாற்ற அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று கொழும்பில் இடம்பெற்றது. இதன்போதே இது அறிவிக்கப்பட்டுள்ளது.