தேசிய நுளம்புக்கட்டுப்பாட்டு வாரம் ; நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு

நாளை முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை தேசிய நுளம்புக்கட்டுப்பாட்டு வாரமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் செப்ரெம்பர் 2014 இலங்கையில் எதிர்வரும் மாதங்களில் வடக்கு கிழக்கு பருவ பெயர்ச்சி மழை ஆரம்பிக்கவுள்ளது.

இக்காலப்பகுதியில் நுளம்புகளின் பரம்பல் அதிகமாகி டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதனைக்கருத்திற்கொண்டு மத்திய சுகாதார அமைச்சு எதிர்வரும் செப்ரெம்பர் 10 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை நாடு முழுவதும் தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரமாக பிரகடனப்படுத்தி இந்த வாரத்தில் நுளம்புக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் திட்டமிட்டுள்ளது.

பிரதேச மட்டத்தில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் பிரதேச செயலாளர்
பிரதேச டெங்குகட்டுப்பாட்டுக்குழுக்கூட்டத்தை உடனடியாக கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிராம மட்ட டெங்கு கட்டுப்பாட்டு குழுக்கள் கிராம மட்டத்தில் நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை
ஒருங்கிணைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

இவ்வாரத்தில் நுளம்புக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பின்வருமாறு முன்னெடுக்கப்பட வேண்டும் என அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.

Capture

இதேவேளை தற்போதைய சூழ்நிலையில் காய்ச்சல் ஏற்படும் போது அது டெங்கு காய்ச்சலாக இருக்கலாம். எனவே, காய்ச்சல் ஏற்படும் நோயாளர்கள் பூரண ஓய்வில் இருக்க வேண்டும். வேலைக்கு செல்பவர்களும், மாணவர்களும் விடுமுறை பெற்று வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும். வீட்டிலும் கடுமையான வேலையேதும் செய்யாது பூரண ஓய்வில் இருக்க வேண்டும் என யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.