தேசிய கல்வியற் கல்லூரிக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 9 ஆம் திகதி வெளியிடப்படுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
2014 ஆம் ஆண்டில் க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் குறித்த அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியுமென கல்வியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி 17 பாடநெறிகளுக்கு 4000 மாணவர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.