தேசியத் தலைவர் பிரபாகரனின் படத்துடன் கைது செய்யப்பட்ட நால்வருக்கும் பிணை

judgement_court_pinaiதமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்துடன் கூடிய தேர்தல் சுவரொட்டிகளை வைத்திருந்ததாக கூறப்பட்டு கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் நால்வருக்கும் சாவகச்சேரி நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை கொடிகாமம் பொலிஸாரால் கொடிகாமம் பகுதியில் வைத்து இராணுவத்தினரின் உதவியுடன் 40 இற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டடிருந்தனர்.

இவர்களின் நால்வர் மீது பொலிஸார் வழக்கு தாக்கல் செய்ததோடு, ஏனையவர்களை விடுதலை செய்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று இந்த வழக்கு சாவகச்சேரி நீதிமன்றில் நடைபெற்றபோது பதில் நீதிவான் சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கினார்.

இதேவேளை இச்சம்பவமானது கூட்டமைப்பினர் மீது திட்டமிட்ட வகையில் இராணுவத்திரனது ஏற்பாட்டில் கட்டவிழ்த்து விடப்பட்ட சதியென கூட்டமைப்பின் மாகாண சபை வேட்பாளர் கேசவன் சயந்தன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி

பிரபாகரனின் புகைப்படத்துடன் துண்டுப்பிரசுரம்; நால்வர் கைது