தேங்காய் வியாபாரி சடலமாக மீட்பு

தேங்காய் கொள்வனவுக்காக யாழ்ப்பாணத்துக்கு வந்த திருகோணமலை வியாபாரி ஒருவர், திடீரென மயக்கமுற்று விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று நேற்று புதன்கிழமை (13) இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையைச் சேர்ந்த மீராசாஹிப் அப்துல் ஜாபர் (வயது 72) என்ற தேங்காய் வியாபாரியே இவ்வாறு திடீரென உயிரிழந்தவராவார்.

யாழ்., கொடிகாமம் பகுதியிலேயே இவர் உயிரிழந்துள்ளார். இவரது சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor