தெல்லிப்பழை பிரதேச செயலருக்கு “நேர்மைக்கு மகுடம்” விருது

தெல்லிப்பழை பிரதேச செயலருக்கு “நேர்மைக்கு மகுடம்” விருது வழங்கப்பட்டுள்ளது.
ஊழல் மற்றும் இலஞ்சமற்ற ஒரு சிறந்த ஆளுமை மிக்க அரச சேவையாளருக்காக இந்த விருது தெல்லிப்பழை பிரதேச செயலாளர் சண்முகராஜா சிவஸ்ரீக்கு வழங்கப்பட்டது.

கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற விருது வழங்கும் நிகழ்விலையே அவருக்கு இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் நேர்மையான அரச அலுவலர்களை கௌரவித்து பாராட்டி நேர்மைக்கு மகுடம் விருதுகளை வருடாந்திரம் வழங்கி வருகின்றது.

அந்த வகையில் இம்முறையும் அகில இலங்கை ரீதியில் 10 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி மற்றும் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன் ஆகியோருக்கும் இந்த விருது கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor