தெல்லிப்பழையில் பெண் சடலமாக மீட்பு

body_foundஆட்டுக்கு குழை வெட்டுவதற்காகச் சென்ற பெண் சடலாமாக மீட்கப்பட்ட சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை தெல்லிப்பழை பழைய தபாற் கந்தோருக்கு அருகாமையில் இடம் பெற்றுள்ளது.

தெல்லிப்பழை பழைய தபாற்கந்தோருக்கு அண்மையாக குடியிருக்கும் மாணிக்கம் செல்வராணி வயது 63 என்பவரே குழை வெட்டச் செல்வதாக சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் தேடிச் சென்றுள்ளனர். அதனையடுத்து அவர் ஆட்கள் நடமாட்டம் அற்ற பகுதியில் உள்ள பற்றைக்கு அருகாமையில் வீழ்ந்து கிடப்பதைக்கண்டு உடனடியாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.

எனினும் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முன்னரே இறந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இறப்பின் காரணம் கண்டறியப்படவில்லை. சடலம் தற்போது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விசாரணைகளை தெல்லிப்பழை பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டுள்ளார்கள்.