தெல்லிப்பழையில் நோயாளர் பராமரிப்புச்சேவை அங்குரார்ப்பணம்

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் கடந்த வாரம் நோயாளர் பராமரிப்புச் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

telleppalai-hospital

தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள மேற்படி நோயாளர் பராமரிப்புச் சேவை வடமாகாணத்திலேயே தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில்தான் முதற்தரமாக வைத்தியசாலையோடு இணைந்த அமைப்பால் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி மு.உமாசங்கர் , வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர் லயன் சி.ஹரிகரன், வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளருமாகிய லயன் சோ.சுகிர்தன் மற்றும் நலன்புரிச் சங்க உறுப்பினர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், பராமரிப்புச் சேவைக்குத் தெரிவுசெய்யப்பட்ட தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டனர்.