தெல்லிப்பளை வைத்தியசாலையின் கதிரியக்க இயந்திரம் பழுது

hospital-tellippalaiகடந்த செவ்வாய்க்கிழமை 30 ஆம் திகதி மதியம் ஏற்பட்ட மழையுடன் கூடிய இடி முழக்கத்தினால் யாழ். தெல்லிப்பளை புற்று நோய் வைத்தியசாலையின் கதிர்இயக்க இயந்திரம் பழுதடைந்துள்ளமையால் புற்று நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

குறிப்பிட்ட இயந்திரத்தின் மூலமே புற்று நோயாளர்களுக்கான கதிர் இயக்க சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

தற்போது இந்த இயந்திரம் பழுதடைந்துள்ளமையால் புற்று நோயாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கதிர் இயக்க சிகிச்சை வழங்குவதில் பாரிய நெருக்கடியான நிலமை ஏற்பட்டுள்ளதுடன் புற்று நோயாளர்கள் பாதிக்கப்படும் நிலமையும் ஏற்பட்டுள்ளது.

குறிப்பிட்ட கதிர் இயக்க இயந்திரத்திரத்தை திருத்துவதற்க்கு உடனடியாக நடவடிக்கை வைத்தியசாலை நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அது வெற்றியளிக்காத நிலமையே காணப்படுகின்றது.

தற்போது கதிர் இயக்க இயந்திரத்தை திருத்துவதற்க்கு கொழும்பில் இருந்து திருத்துனர்கள் வரவழைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் காரணமாக கடந்த நான்கு நாட்களாக கதிர் இயக்க சிகிச்சை வழங்க முடியாத நிலமை காணப்படுகின்றது.