தெல்லிப்பளை, தோதரை அம்மன் ஆலயத்தில் திருட்டு

robberyதெல்லிப்பளை, தோதரை அம்மன் ஆலய ரிஷப வாகனம் திங்கட்கிழமை திருடப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த இடத்திறக்கு சென்ற தெல்லிப்பளை குற்றத்தடுப்பு பொலிஸார் ஆலயத்தின் பின்புறம் உள்ள தோட்ட வெளியில் இருந்த வாகனத்தின் பீடம் உடைத்து எறியப்பட்ட நிலையில் மீட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பளை பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர்.

கடந்த கால இடம்பெயர்வுகளின் பின்னர் இந்த வாகனம் அடியவர்களின் உதவியுடன் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor