தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் தோல் நோய்க்கான சிகிச்சைப் பிரிவு

hospital-tellippalaiதெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் கடந்த வாரத்தில் இருந்து தோல் நோய்க்கான சிகிச்சைப் பிரிவு இயங்கத் தொடங்கியுள்ளதாக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் வைத்தியட்சகர் வைத்தியகலாநிதி எம்.உமாசங்கர் தெரிவித்தார்.

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை கடந்த இரண்டு வருடங்களாக சொந்த இடத்தில் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ள நிலையில், படிப்படியாக தனது சேவைகளை விஸ்தரித்து கடமைகளை மேற்க்கொள்ள ஆரம்பித்துள்ளது.

குறிப்பாக பல்வேறு ஊழியா்களின் வளப் பற்றாக்குறை காணப்படுகின்ற போதிலும் கடமையாற்றும் ஊழியா்களின் மிகையான ஒத்துழைப்புடன் இத்தகைய கிளினிக்குகளை தற்போது மேற்க்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Recommended For You

About the Author: Editor